புத்திர பாக்கியம்

புத்திர பாக்கியம் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் என்பது 5 இடம் தொடர்புடையது இதன் அதிபதி வலுவாக இருந்து 5 ம் இடமும் வலுப்பெற்று புத்திர காரகன் குரு பகவானும் வலிமையாக இருக்க புத்திர பாக்கியம் எளிதில் கிடைக்கிறது இதில் ஏதேனும் ஒரு Factor அடிபடும் போது தான் தாமதம் ஆகிறது 5 ம் இடத்தின் வலு என்பது இந்த இடத்திற்கு இரு புறமும் சனி செவ்வாய் ராகு கேது தேய்பிறை சந்திரன் சூரியன் போன்ற பாவ கிரகங்கள் நின்று பாவ கத்தரி அமைப்பில் 5 ம் இடம் கெட கூடாது அதே போல ராகு கேது சனி ஐந்தில் நிற்பது அல்லது காராகோ பாவ நாஷ்த்தி என்னும் அடிப்படையில் குரு இருப்பதும் தாமதம் கொண்ட புத்திர பாக்கியத்தை கொடுக்கும் குருவை தவிர மேலே சொன்ன பாவ கிரகங்கள் அந்த இடத்தில் நின்று அதை குரு பார்வை செய்தால் தோஷம் இல்லை 5 ம் அதிபதி அதீத வலுவோடு இருந்தாலும் தோஷம் இல்லை இங்கே சனி நின்றால் புத்திர பாக்கியம் தாமதம் உண்டாகும் ஆனால் கண்டிப்பாக கிடைத்தே தீரும் இந்த இடத்தோடு 6 8 செவ்வாய் சம்பந்தபட மருத்துவ சிகிச்சை மூலம் பாக்கியம் உண்டாகும் குழந்தை பாக்கியம் கணிக்க கணவன் மனைவி என இரு ஜாதகங்களையும் ஆராய வேண்டும் புத்திர பாக்கியம் தாமதம் ஆகிற நிலையில் குரு பகவான் வழிபாடு அல்லது 5 ம் அதிபதி வழிபாடு செய்ய உண்டாகும் அல்லது கோகுல அஷ்டமி அன்று கண்ணன் பாதம் வரைந்து வழிபாடு செய்ய வேண்டும் கிராமங்களில் மாரி அம்மன் கோவில் அல்லது அங்கே பிரபலமாக உள்ள கோவில்களில் தவரு பிள்ளை உருவம் செய்து வைத்து வேண்டி கொள்வார்கள் அல்லது ஸ்தல விருச்சதில் தொட்டில் கட்டி வழிபடுவார்கள் நான் பார்த்த வரை இது அதீத பலன் அளிக்கும்