சாதகம் என்றால் என்ன?
நாம் பிறக்கும்போது இயங்க ஆரம்பிக்கும் மனமே நம் ஜாதகத்தின் அடிப்படை
நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பம் (பொருளளவிலும் சரி) அனைத்திற்கும் காரணம் நம் மனதேயாகும்.அவரவரின் ஜாதகத்தை வைத்து தெளிவாகக் கூறமுடியும்.
இவ்வாறு நமக்கு வரும் இன்னல்களை நம் மனதை மாற்றுவதன் மூலமாகத் தவிர்க்க முடியும். இதனயே நாம் சோதிடத்தில் பரிகாரம் என்று கூறுகிறோம்.
எடுத்துக்காட்டாக ஒருவர் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கும்போது(மற்றவர் நோகாமல்) அவருக்கு அனைத்து கிரகங்களாலும் நன்மையே நிகழும்
இவ்வாறு நமக்கு நன்மை செய்யுமாறு மாற்றிக்கொள்ள பயன்படுவதே சாதகம் எனப்படும் கிரகக் கட்டங்கள் ஆகும்.
அனைவரும் பொதுவாகக் கூறுவது சாதகம் பலிக்கவில்லை என. ஆனால் இதில் ஒன்று மிக முக்கியமானது விதிகள் பற்றி தெரிந்த நிறையப் பேருக்கு விதி விலக்குகள் பற்றி தெரிவதில்லை இதனாலேயே தகுந்த பலன் கூற முடியாமல் போய்விடும். எனவே விதிவிலக்குகள் பற்றிய அறிவும் நிறைய முக்கியம்.