கரணம்
கரணம் பஞ்சாங்கத்தில் 5வது அங்கமாகும். ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
11 கரணப் பெயர்களும் வருமாறு:
- பவம்
- பாலவம்
- கௌலவம்
- தைதுளை
- கரசை
- வனசை
- பத்திரை
- சகுனி
- சதுஷ்பாதம்
- நாகவம்
- கிமிஸ்துக்கினம்
இந்த ஐந்து அங்கங்களையும் கொண்டு பஞ்சாங்கம் பார்க்க வேண்டும். உங்கள் பஞ்சாங்கத்தில் வாக்கியமாக இருந்தாலும் சரி திருகணிதமாக இருந்தாலும் சரி ஆங்கில தேதி மற்றும் தமிழ் தேதி கொடுக்கப்பட்டிருக்கும்.
ஜோதிடப்படி காலை சூரிய உதயம் முதல் அடுத்த சூரிய உதயம் வரை ஒரு நாள் ஆகும். சூரிய உதயம் காலை ஆறு மணி எனில் அதுவே அன்றையநாள் ஆகும். 6-12(பகல்) வரை முன்பகல் காலம் 12-6(பகல்)பிற்பகல் காலம் ஆகும். 6-12(இரவு) முன்னிரவு காலம் 12-6(இரவு) பின்னிரவு காலம்.
தமிழ் தேதியில் அன்றையநாளில் எது வரை நட்சத்திரம் உள்ளது அடுத்த நட்சத்திரம் தொடங்கும் நேரமும் மற்றும் கிழமை, கரணம், திதி, யோகம் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கொண்டு கணக்கீடுக