சுவாதி
திருவோணம் தாரை வழிபாடு திருவோணம் நட்சத்திர வடிவங்கள் காதுமடல் மூன்று பாதசுவடு முழக்கோல் ஆமை விளக்கு அம்பு வடிவம் (பிரம்மாஸ்திரம்) மேற்கண்ட வடிவம் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்க கூடிய தெய்வம் அல்லது மகான் அல்லது அந்த ரூபங்களையே நாம் வழிபாடு செய்வதும் தினமும் பார்த்து தியானம் செய்து வருவதும் நமக்கு நல்ல வழிகாட்டுதலை, நல்ல சிந்தனையும், யோசிக்கும் திறனையும் அபாய சூழலில் இருந்து வெளிவரக்கூடிய சக்தியையும், உழைப்பிற்கான பலனையும், வீரிய கர்மபலனை கடப்பதற்கும் ஆற்றலை நமக்கு கொடுக்கும். திருவோணம் நட்சத்திரத்தை தன்னுடைய சுபதாரையாகக் கொண்ட நட்சத்திரங்களான: 1. உத்திராடம் 2. கார்த்திகை 3. உத்திரம் 4. திருவோணம் 5. ரோகிணி 6. அஸ்தம் 7. அவிட்டம் 8. மிருகசீரிடம் 9. சித்திரை 10. அனுசம் 11. உத்திரட்டாதி 12. பூசம் 13. மகம் 14. மூலம் 15. அஸ்வினி மேலே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய நட்சத்திரத்தில் உதித்த நபர்களுக்கும் மிகச் சிறந்த வழிபாட்டு தெய்வ ஸ்தலங்கள் பின்வருமாறு: 1. உலகளந்த பெருமாள், காஞ்சி 2. திருப்பதி வெங்கடேச பெருமாள் 3. உப்பிலியப்பம், திருநாகேஸ்வரம் 4. திரிவிக்கிரம பெருமாள், திருக்கோவிலூர் 5. மித்ரானந்தபுரம் வாமனமூர்த்தி கோவில் மேற்கூறிய தெய்வ வழிபாடு மிகச்சிறந்த நேர்மறை எண்ணங்களை கொடுத்து உங்களுக்கு வாழ்வில் வெற்றியை பெற உதவும். மேலே பட்டியலிட்ட நட்சத்திர நபர்கள் எந்த ஆலயம் சென்றாலும் தீபம் ஏற்றி வைத்து பிராத்தனை செய்வது அளப்பரிய நற்பலனை தரும். மேற்கண்ட தெய்வங்களை உங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதும் உங்கள் மொபைல் போனில் ஹோம் ஸ்கிரீன் ஆக வைத்துக் கொள்வதும், உங்கள் வாகனத்தில் நீங்கள் பார்க்குமாறு வைத்துக் கொள்வதும், இந்த தெய்வ உருவங்களை தினமும் மனதில் நினைத்து மந்திரங்கள் சொல்வதும் சர்வ நிச்சயமாக நல்ல பலன்களை கொடுக்கும். இதில் ஒரு முறை வழிபடுவதால் நமக்கு பலன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வழிபாடு செய்வது சரியான முறை அல்ல. தாரை தெய்வ வழிபாடு பொறுத்தவரை உங்களுக்கு மனநிறைவு ஏற்படும் வரை தொடர்ந்து வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது திருத்தலம் சென்று வழிபாடு செய்வது என்பது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இந்த நட்சத்திரத்திற்குரிய உருவங்களையும் உங்களது அலுவலகங்களிலோ அல்லது உங்களுக்கான தனிப்பட்ட அறையிலோ நீங்கள் பயன்படுத்தலாம். தாரை வடிவ மற்றும் தெய்வ வழிபாடுகள் பொருத்தவரை வைணாசிகம் சந்திராஷ்டமும் திதி சூனியம் முடக்கு ராசி, முடக்கு நட்சத்திரம் பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை ஆகவே மேற்கூறிய வழிபாடு முறைகளை குழப்பம் இன்றி தவறாமல் செய்து வாருங்கள். தாரை வடிவ மற்றும் தெய்வ வழிபாடுகள் பொருத்தவரை வைணாசிகம் சந்திராஷ்டமும் திதி சூனியம் முடக்கு ராசி, முடக்கு நட்சத்திரம் பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை ஆகவே மேற்கூறிய வழிபாடு முறைகளை குழப்பம் இன்றி தவறாமல் செய்து வாருங்கள்.