கிழமை
பஞ்சாங்கத்தில் வாரம் என்பது கிழமை ஆகும். 7 கிழமைகளில் ராகு கேது தவிர மற்ற 7 கிரகங்களுக்கு ஆதிக்கம் இருப்பதை காட்டும். அவை
- ஞாயிறு கிழமை – சூரியன்
- திங்கள் கிழமை – சந்திரன்
- செவ்வாய் கிழமை – செவ்வாய்
- புதன் கிழமை – புதன்
- வியாழன் கிழமை – குரு
- வெள்ளி கிழமை – சுக்கிரன்
- சனி கிழமை – சனி
ஒவ்வொரு நாளும் மேற் குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைக் கொண்டிருக்கும். இங்கே காட்டப்பட்ட ஒழுங்கின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் கிழமைப் பெயர்கள் சனிக்கிழமைக்குப் பின் மீண்டும் ஞாயிற்றில் தொடங்கிச் சுழற்சி முறையில் வரும்.